பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குநர் பி.வாசு, சூப்பர் ஸ்டார் உடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் என்று கூறினார்.
மேலும், ஒவ்வொருத்தருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது என்றும், அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள்.
அதற்கு உண்டான பலனை மக்கள் அளிக்கிறார்கள். அதேபோல் அதற்கு உண்டான பட்டத்தையும் மக்களே வழங்குவார்கள்.
அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி யாரும் பேச வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. நன்றி என்று கூறினார்.