விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில், இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், இயக்குநர் பாலாவின் பரதேசி படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் தோற்றமும், தங்கலான் படத்தில் உள்ள தோற்றமும் ஒரே மாதிரியாக உள்ளதே என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பா.ரஞ்சித், “இரண்டு கதையும் ஒரே காலத்தில் நடந்தவை தான். அதனால் தான் தோற்றம் ஒரே மாதிரியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “Red Tea என்ற நாவலை மையமாக வைத்து தான், அந்த திரைப்படத்தை பாலா இயக்கியிருந்தார். நானும் அந்த நாவலை படமாக இயக்க நினைத்திருந்தேன். ஆனால், அதற்குள் அவர் செய்துவிட்டார்” என்ற சுவாரசிய தகவலையும், பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார்.