“திமுகவிலும் ஜாதி உள்ளது.. அது உதயநிதிக்கும் தெரியும்” – பா.ரஞ்சித்தின் மாமன்னன் விமர்சனம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில், கடந்த 29-ஆம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம், வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தனுஷ், கமல், வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களையே கூறி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று #மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்..
திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.

பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!”

இவ்வாறு தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News