சார்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில், விக்ரம் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த எதிர்பார்ப்பை கூட்டும் வகையில், அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதாவது, ஹாலிவுட்டில் வெளியான பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள டேனியல் கால்டாகிரோன் என்ற ஹாலிவுட் நடிகர், தங்கலான் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாகவும், கூறப்படுகிறது.