“குறைந்தபட்சம் ஒப்புக்கொள்வீரா” – முதலமைச்சருக்கு பா.ரஞ்சித் கேள்வி!

மதுரை மாவட்டத்தை சேர்ந்த தலித் இளைஞர், புல்லட் வாகனம் ஓட்டியதற்காக, கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார். மேலும், அவரது கைகளையும் அவர்கள் வெட்டியுள்ளனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித், தனது எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா???

மான்புமிகு முதல்வர் அவர்களே!! தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News