நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், தங்கலான் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, பா.ரஞ்சித் இன்னொரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அட்டகத்தி தினேஷை வைத்து, வெறும் 45 நாட்களில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க, பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளாராம். குறுகிய கால படைப்பான இந்த திரைப்படம், தங்கலான் ரிலீஸ்-க்கு பிறகு, வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதுவரை, அட்டகத்தி, காபலி ஆகிய திரைப்படங்களில், பா.ரஞ்சித் – தினேஷ் ஆகியோர் ஒன்றாக பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.