விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் என்ற படத்தை, பா.ரஞ்சித் கடைசியாக இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், வசூல் அளவில், பெருமளவில் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, பா.ரஞ்சித்தின் அடுத்த படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, அட்டகத்தி தினேஷ், ஆர்யா ஆகியோரை வைத்து, கேங்ஸ்டர் மற்றும் மேஜிக்கல் ரியலிசம் பாணியில், புதிய கதை ஒன்றை அவர் இயக்க உள்ளார். இந்த படத்திற்கான பின்னணி பணிகள், நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, வரும் 28-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாம். பூந்தமல்லியில் உள்ள பிரம்மாண்ட செட்டில் தான், இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.