ஒரே ஒரு ஏ4 பேப்பரில் 135 கோயில்களின் ஓவியம் – கல்லூரி மாணவி சாதனை..!

தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர் பேனாவை மட்டும் பயன்படுத்தி ஒரே ஒரு ஏ4 பேப்பரில் தமிழகத்தில் உள்ள 135 முக்கிய கோயில்களின் தோற்றத்தைப் படமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். இதனை அவர் மூன்று மணி நேரத்தில் வரைந்துள்ளார்.

தஞ்சாவூரை சேர்ந்த யமுனா (19) என்கிற மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் பேஷன் டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக யமுனா இருந்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினமான நேற்று ஒரு ஏ4 பேப்பரில் 135 கோயில்கள் தோற்றத்தை அச்சு அசலாக வரைந்து சோழன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். 135 கோயில்களையும் பார்க்காமலேயே வரைந்த யமுனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஓவியம் வரைவதில் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் என் நீண்ட நாள் எண்ணம். இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற 300 கோயில்கள் வரைய வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன் என யமுனா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News