பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல்.. 5 பேர் பலி..

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று, அப்பகுதியில் உள்ள சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுதொடர்பான பிரச்சனை, அந்நாட்டில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இதற்கிடையே, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் ஒன்று உருவாகி, தனிநாடு கோரிக்கையை முன்வைத்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் கூட, பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புப் படையினர் பயணித்த பயணிகள் ரயில் கடத்தப்பட்டு, சில ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது, பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை சேர்ந்தவர்கள், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர், படுகாயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News