அன்றாட செலவிற்கு கூட வருமானம் இல்லை…பாகிஸ்தானில் தொடரும் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளிடம் இருந்து கடன் வாங்கி பொருளாதார சிக்கலை சமாளிக்கும் நிலை உருவாகியுள்ளது.

நெருக்கடி காரணமாக அங்கு வாழும் மக்களில் 74 சதவீதம் மக்கள் தங்கள் அன்றாட செலவிற்கு கூட வருமானம் ஈட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் 60 சதவீதமாக இருந்த நிலை தற்போது 74 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 40 சதவீத மக்கள் கடன் வாங்கி தங்களுடைய செலவுகளை நடத்துவதாகவும், 10 சதவீத மக்கள் முதன்மையான வேலையுடன் பகுதி நேர வேலைக்கு சென்று தங்களுடைய செலவுகளை கவனித்து கொள்வதாகவும் அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தானில் இதே சூழல் தொடர்ந்தால் மக்கள் வேறு நாடுகளுக்கு செல்லும் நிலை அல்லது நாடு முழுவதும் கலவரம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

Recent News