பாகிஸ்தான் நாட்டில் உள்ள குவெட்டா பகுதியில் இருந்து, பயணிகள் ரயில் ஒன்று கிளம்பியுள்ளது. இந்த ரயில், பெஷாவர் என்ற பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழு, கடத்தியுள்ளது.
மேலும், ரயிலில் பயணித்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர்கள் உட்பட 100 பேரை, அவர்கள் பிணையக் கைதிகளாக பிடித்துள்ளனர்.
மேலும், ரயிலில் இருந்த மற்ற 300-க்கும் மேற்பட்ட பயணிகளை, கிளர்ச்சிக் குழு விடுவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.