பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயுக்களின் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது.
அந்நாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பக்ரீத் பண்டிகை தற்போது கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 மற்றும் டீசல் ரூ.2.33 குறைக்கப்படுவதாக பிரதமர் ஷபாஸ் ெஷரீப் அறிவித்தார். எனவே, அந்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ.258 மற்றும் டீசல் ரூ.267 என குறைந்துள்ளது.