300 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை…போராட்டத்தில் இறங்கிய பொது மக்கள்

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அங்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் குறைக்கப்பட்டு வருவதால் பெட்ரோலின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.91 அதிகரித்து ரூ.305.36 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் ரூ.18.44 உயர்த்தப்பட்டு ரூ.311.84 ஆக உயர்ந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.300-ஐ தாண்டி உள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் தலைநகர் கராச்சி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News