பாகிஸ்தானில் அப்துல் உல் ஹக் தலைமையிலான காபந்து அரசு பொறுப்பேற்ற 48 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.17.50 வரை உயர்ந்து 90.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல டீசல் விலை 20 ரூபாய் வரை உயர்ந்து லிட்டருக்கு 293.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என பாகிஸ்தான் நிதிப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.