பாகிஸ்தான் பெஷாவர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர், 120க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரிப் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு இதற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார்.
“தொழுகை வேலையில் மசூதியில் நடைபெற்ற இந்த தீவிரவாத தற்கொலை படை தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்” என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவத்தால் பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.