ஜல்லிக்கட்டு என்றால் பொங்கல், பொங்கல் என்றால் ஜல்லிக்கட்டு. இவ்வாறு பொங்கல் திருவிழாவையும், ஜல்லிக்கட்டு போட்டியையும் பிரிக்க முடியாது.
தமிழரின் வீர விளையாட்டாக கருதப்படும் இந்த போட்டி, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 பகுதிகளில், வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த நிலையில், இன்று பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 100 காளைகளும், 910 காளையர்களும் கலந்துக் கொண்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, வனிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியும், மாவட்ட ஆட்சியர் சங்கீதாவும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டியில், முதல் பரிசை பிடிக்கும் காளைக்கு டிராக்டரும், முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.