பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அந்த வகையில் நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில் பாலமேடு மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.