பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியா? EPS சூசக பதில்!

தமிழகத்தின் சட்டமன்றங்களுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், எந்தெந்த கட்சியினர், யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து, பல்வேறு அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக உள்ளது” என்றும், “திமுக தான் தங்களது எதிரி. மற்ற கட்சிகள் இல்லை” என்றும் தெரிவித்தார்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்பதெல்லாம், 6 மாதத்திற்கு பிறகு தான் தெரியும் என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பதை, 6 மாதத்திற்கு பிறகு கேளுங்கள் என்றும் கூறினார்.

இல்லை என்று பளிச்சென பதில் அளிக்க பழனிசாமி மறுத்திருப்பதால், அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News