அதிமுகவின் முன்னாள் முக்கிய தலைவரும், முன்னாள் முதலமைச்சரும் ஆனவர் ஓ.பன்னீர் செல்வம். இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று, அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் உரிமைக் மீட்புக் குழு ஒன்றை உருவாக்கி, சட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை, கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றும், “ஓ.பி.எஸ். அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர்” என்றும் கூறினார்.
மேலும், “திமுகவை தவிர மற்ற எந்த கட்சியும் அதிமுகவுக்கு எதிரி இல்லை” என்றும், “ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம்” என்றும், கூறினார். இவரது இந்த பேட்டி, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.