Connect with us

Raj News Tamil

“குருத்தோலை ஞாயிறு” கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

தமிழகம்

“குருத்தோலை ஞாயிறு” கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைவதற்கு முன்பாக ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக கோவேறு கழுதை மீது அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது வழிநெடுகிலும் மக்கள் ஒலிவ மர இலைகளை கையில் பிடித்து ஓசானா ஓசானா பாடலை பாடியதாகவும் கிறிஸ்தவர்களின் புனிதநூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது.

அந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் கிறிஸ்தவா்கள் கடைப்பிடித்து வரும் தவக்காலத்தின் இறுதி வாரமான புனித வாரம், குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையொட்டி ஆலயங்களில் குருத்தோலை பவனியும், அதைத்தொடர்ந்து, சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.

அந்த வகையில் சென்னை அமைந்தகரை பேராலயத்தில் காலையே குருத்தோலை பவனியும், அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பவனியாக சென்று குருத்தோலைகளுடன் ஓசன்னா என்று முழங்கினார்கள்.

குருத்தோலைகளில் தென்னை, பனை சிலுவையின் அடையாளத்தை பல்வேறு வடிவங்களில் தயாரித்து அதனை கையில் பிடித்து சென்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top