ஆதார் எண் – பான் எண் இணைக்காதவர்கள் யார்? ஷாக் தந்த அதிகாரிகள்! சீக்கிரம் இணைச்சிடுங்க..!

ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும் என்று வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும், ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும், பலரும் இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வருமான வரித்துறையினர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள், ஆதார் எண்ணையும் பான் கார்டு எண்ணையும் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க தவறினால், ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து, பான் கார்டு எண் செயலிழந்துவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைக்காதவர்கள், உடனே இணைத்துவிடுங்கள்…