பஞ்சாயத்து உறுப்பினர் வெட்டி கொலை…நெல்லையில் தொடரும் பயங்கரம்

நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜாமணியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜாமணியை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவன் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது போன்ற சூழ்நிலையில் நேற்று மேலும் ஒரு கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது.

RELATED ARTICLES

Recent News