பாபநாசம் அணை நீர்மட்டம் அதிகரிப்பு…! மகிழ்ச்சியில் விவசாயிகள்…!

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 21 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.

அதன் துணை ஆறுகளின் நீர்மட்டமும், உயர்ந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகளை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் தொடர் மழையால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையும், பாதுகாப்பின்றி ஆறு கண்மாய்களில் குளிக்க வேண்டமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.