சுதா கொங்காரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.
இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், புதிய தகவல் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.
அதாவது, “பராசக்தி படத்தின் படப்பிடிப்பை, லைவ் லொக்கேஷன்களில் நடத்தி வருகிறோம். முதல் நாளிலேயே அந்த திரைப்படத்தின் தலைப்பை முடிவு செய்துவிட்டோம்” என்று கூறினார். மேலும், “பாசில் ஜோசப் இப்படத்தில் இணைந்துவிட்டார்” என்றும், “வரும் பொங்கல் பண்டிகை அன்று, இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும்” என்றும், அவர் கூறியுள்ளார்.