கீர்த்தி என்ற பெயரில் செயல்பட்டு வரும் எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவில், அவர் குறிப்பிட்ட சம்பவம், இணையத்தில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியதுடன், வைரலாகவும் பரவி வருகிறது.
அதாவது, உணவகத்திற்கு சென்ற கீர்த்தி என்ற பெண், தனது செல்போனில், சமூக வலைதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, கீர்த்தியின் அருகில் வந்த 2-ல் இருந்து 3 வயது கொண்ட சிறுவன், செல்போனை காட்டுங்கள் என்று கூறியுள்ளான்.
இதனை கேட்டு சிரித்த அந்த பெண், “மற்றவர்களின் செல்போனை நாம பார்க்கக் கூடாது” என்று அன்பாக கூறியுள்ளார். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத சிறுவன், திடீரென கதறி அழுதுள்ளான்.
இவனது அழுகை சத்தம் கேட்டு வந்த பெற்றோர், “செல்போனை காட்டிவிடுங்கள். இல்லையென்றால், அவன் தொடர்ந்து அழுதுக் கொண்டே இருப்பான்” என கூறியுள்ளனர்.
இதனால் கடுப்பான கீர்த்தி, திடீரென சத்தமாக கத்தியுள்ளார். மேலும், சிறுவனை போலவே சத்தமாக அழுது காண்பித்துள்ளார். இவரது இந்த செயலை பார்த்த சிறுவனும், அவனது பெற்றோர்களும், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, தனது இருக்கையில் அமர்ந்த சிறுவன், உணவகத்தில் இருந்து கீர்த்தி செல்லும் வரை, அமைதியாக இருந்துள்ளான். இவ்வாறு தனது பதிவில், அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது.