நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, இன்று 21 மாநிலங்களில் வாக்குபதிவு, நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சென்னை நீலாங்கரை வாக்கு பதிவு மையத்தில், நடிகர் விஜய் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
வாக்கு செலுத்திவிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர் வெளியேறிவிட்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் துவங்கினார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று கூறிய அவர், தங்களது இலக்கு 2026 தேர்தல் தான் என்றும் கூறியிருந்தார்.
இதனை வைத்து பார்க்கும்போது, சாதாரண வாக்காளராக விஜய் வாக்கு செலுத்தும் கடைசி தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.