டெல்லியில் நேற்று (டிச.13) மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் ஆகிய பணியாளர்களை இடைநீக்கம் செய்து இன்று (டிச.14) மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.