பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்..!

பாராளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் ஆண்டு தோறும் நவம்பர் இறுதியில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெருமென்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 17-வேலை நாட்கள் நடபெரும் இந்த கூட்டுத்தொடரில் 16-மசோதாக்களை மத்திய அரசு விவாதிக்க உள்ளது.

இது குறித்து விவாதிக்க மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.