ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 -ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 -ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ம் தேதி துவங்கி பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் ஆட்சி காலத்தில் தாக்கல் செய்ய உள்ள கடைசி பட்ஜெட் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.