நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி சென்னையிலும்,கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 4 ம் தேதி மதியம் 3 மணிக்கு கோவையிலும் நடைபெறும் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட திட்டம் கட்சி வட்டாரம் தகவல் தெரிவிக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது.
பிப்ரவரி 4-ம் தேதி கோவை மண்டல நிர்வாகிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது.