நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், வித்தியாசமான படைப்புகளை எடுப்பதில் வல்லவர் என்றே கூறலாம். இவர் தற்போது, TEENZ என்ற, திகில் படத்தை எடுத்திருக்கிறார்.
இப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே தேதியில், கமலின் இந்தியன் 2 என்ற பிரம்மாண்ட திரைப்படம் ரிலீஸ் ஆவதால், இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது சந்தேகமாக உள்ளது.
இருப்பினும், தனது படைப்பின் மீது கொண்ட நம்பிக்கையால், பார்த்திபன் எடுத்துள்ள இந்த முடிவு, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.