மீண்டும் ரிலீஸ் ஆகிறது கார்த்தியின் பருத்திவீரன்..!!

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தின் மூலம் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை தொழில்நுட்ப மெருகேற்றல் செய்து மறுவெளியீடு செய்ய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Recent News