பசங்க பட நடிகரின் காதலியா இவர்? வைரலாகும் போட்டோ!

பாண்டிராஜன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் பசங்க. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், 11 கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோவாக நடித்த கிஷோர், தற்போது ப்ரீத்தி என்ற சீரியல் நடிகையை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.