ஒடிசா, பீகார், ஆந்திராவை தொடர்ந்து தற்போது கேரளாவிலும் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் நிலம்பூரில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பயணிகள் ரயில், பாலக்காடு வல்லபுழா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது ரயில் மோதியது.
இதில் என்ஜினின் முன்பக்கத்தில் உள்ள சக்கரம் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயிலானது உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தொடரும் ரயில் விபத்துகளால் பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.