கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர் – ஆலப்புழா விரைவு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் மற்ற பெட்டிகள் உடனடியாக கழற்றிவிடப்பட்டன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எரிபொருளுடன் ரயிலில் ஏறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.