Connect with us

Raj News Tamil

பயணிகள் அதிர்ச்சி: அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை!

தமிழகம்

பயணிகள் அதிர்ச்சி: அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை!

தமிழகத்தில் அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை இடம் பெற்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தென் தமிழகத்தின் பிரதான பேருந்து நிலையமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, திருப்பூர், காரைக்குடி, தேனி, கம்பம், கோவை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு தென் தமிழகத்திற்கும் வட தமிழகத்திற்கும் இரவு பகலாக சுமார் ஆயிரம் பேருந்துகள் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்டTN 57 N 2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் சீன மொழி இடம் பெற்று பேருந்து நிலையத்திற்கு வந்தது.

அந்த அரசு பேருந்து சீன மொழியிலேயே பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு சென்றதால் பேருந்தில் ஏற இருந்த பயணிகளும் காத்திருந்த பயணிகளும் தமிழ் சொற்களுக்கு பதிலாக சீன மொழி இடம்பெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top