பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 29 (வியாழக்கிழமை) இரவு 8 மணிமுதல் செப்டம்பர் 2 (திங்கள்கிழமை) மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆகஸ்ட் 30 (வெள்ளிக்கிழமை) வழக்கமாக நடைபெறும் ஆவண சரிபார்ப்பு நேர்க்காணல்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரதான அலுவலகம் உள்பட அனைத்து மண்டல அலுவலகங்களில் இயங்கும் பொது விசாரணை அரங்குகள் ஆகஸ்ட் 30 மட்டும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.