ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் நேற்று வெளியானது. நான்கு வருட காத்திருப்புக்குப் பிறகு ஷாருக்கான் படம் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் தியேட்டர்களுக்கு வெளியே பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

பல்வேறு சர்ச்சைக்கு பிறகு வெளியான இப்படத்தை, இயக்குனர் ஆதித்யா சோப்ரா உருவாக்கி இருந்தார். இந்த நிலையில் பதான் படமானது இந்தியாவில் மட்டும் ரூ. 57 கோடியும், ஹிந்தியில் ரூ.55 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகளவில் சுமார் 100 கோடியை தாண்டியுள்ளதகா கூறப்படுகிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம் ஹுந்தியில் ரூ. 52 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது