பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவான இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 5-ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியானதால் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில் ரிலீஸ் ஆனது முதல் இன்று வரை உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவரை பாலிவுட்டில் எந்த படமும் இந்த வசூலை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.