Connect with us

Raj News Tamil

விஜய் ரசிகா்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!வைரலாகும் பதிவு!

சினிமா

விஜய் ரசிகா்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!வைரலாகும் பதிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் மற்றும் முண்னணி நட்சத்திரங்கள் பலா் நடித்துள்ளனர்.

அக்டோபர் 20-ஆம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், ‘லியோ’ திரைப்படம் இதுவரை ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பார்த்திபன் (விஜய்) கதாபாத்திரத்தின் புகைப்படத்தில் இயக்குநர் பார்த்திபனின் புகைப்படத்தை வைத்து ரசிகர்கள் எடிட் செய்து எக்ஸ் தளத்தில் அவரை tag செய்து பதிவிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், ‘Mr Vijay fans மன்னிக்க! இப்படியெல்லாம் செய்ய முடியுமான்னு ஆச்சர்யமா இருக்கு!” என்று பதிவிட்டுள்ளார்.இச்செய்தி தற்போது விஜய் ரசிகா்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top