ரிலீசுக்கு முன்னரே சாதனை படைத்த பத்து தல!

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்கு பிறகு, நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகிறார். மிகவும் சுறுசுறுப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படம், டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஓடிடி பிசினஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசான் நிறுவனம், ரூபாய் 26 கோடிக்கு, இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பெற்றுள்ளது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 50 கோடியில், பாதி தொகையை இதன்மூலம் மட்டுமே பெற்று, பத்து தல படம் பெரும் சாதனை படைத்துள்ளது. மேலும், திரையரங்குகளில் வெளியான பிறகு, பல சாதனைகள் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.