மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சிம்பு, பத்து தல படத்தின் மூலம் 3-வது வெற்றியை பதிவு செய்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இதற்கிடையே, நேற்று பத்து தல படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடிய சிம்பு ரசிகர்கள், படத்தை காண்பதற்காக உள்ளே சென்றனர். படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் படம் எப்படி உள்ளது என்று தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். அதில், பெரும்பாலானா கமெண்ட்ஸ்கள், முதல் பாதி சுமார் என்றும், இரண்டாம் பாதியில் தான் படம் விறுவிறுப்பாக உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
அதற்கு காரணம் என்னவென்றால், முதல் பாதியின் இடைவேளையின் போது தான் சிம்பு அறிமுகம் ஆகிறார், பின்னர் இரண்டாம் பாதி முழுவதும் ஆக்கிரமிக்கும் சிம்பு, மொத்த படத்தையும் தாங்கி பிடிப்பதாக, பல்வேறு விமர்சனங்களில் கூறப்பட்டுள்ளது.
சிம்பு வசீகர தோற்றமும், வசன உச்சரிப்பும், நடன அசைவுகளும், அவரது ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்துள்ளதாகவும், கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில், ஒரு தடவை பார்க்கக் கூடிய சுமாரா படம் என்ற வகையிலேயே, பத்து தல படம் இருப்பதாக, பெரும்பாலான விமர்சனங்கள் எழுதப்பட்டு வருகிறது.