சினிமா
பத்து தல படத்தின் முதல் விமர்சனம்! தெறிக்கவிட்ட சிம்பு! பதிவு வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்!
ஜில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.கிருஷ்ணா. இவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் பத்து தல. மப்டி என்ற கன்னட திரைப்படத்தின் ரீமேக்கான இந்த படத்தில், சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்து வருகின்றனர்.
வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், பத்து தல படத்தை பார்த்துவிட்டு, பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பத்து தல படத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பு அசத்தலாக உள்ளது.. செம எனர்ஜியுடன் அவர் நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார். “கௌதம் கார்த்திக்கிற்கு, இந்த படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
மேலும், படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிய தனஞ்ஜெயன், இந்த படம் பாக்ஸ் ஆபிசை அடித்து நொறுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login