சிம்புவின் தரமான சம்பவத்துக்கு ரெடியாகுங்கள்?

ஈஸ்வரன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கிய சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார்.

இதன்காரணமாக, இவரது அடுத்த திரைப்படமான பத்து தல மீது, ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று மாலை 5.30 மணிக்கு, இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகா் சிம்பு, தரமான டீசர் ரெடியாகியுள்ளது என்றும், ஏ.ஆர்.ரகுமான மிரட்டியுள்ளார் என்றும் பதிவிட்டிருந்தார். சிம்புவின் இந்த பதிவால், ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.