அரசு மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு! – வென்டிலேட்டர் காரணமா?

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திற்குட்பட்ட சிவனாகரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மனைவி அமராவதி(48) நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அமராவதி சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று ஏற்பட்ட மின்தடை காரணமாக வென்டிலேட்டர் செயல் இழந்ததில் அமராவதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் கூறுகையில், காச நோய் காரணமாக நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அமராவதி பின்னர் அங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரது ரத்தத்தில் நுண்கிருமி கலந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 7 நிமிடத்தில் மின்தடை சரி செய்யப்பட்டதாகவும், அமராவதி போன்று வென்டிலேட்டர் வைக்கப்பட்ட 4 பேர் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News