மணல் அள்ளுவதற்கென்று, தனியாக ஒரு அளவு உள்ளது. அந்த அளவை மீறி மணல் அல்லுவதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இதன்காரணமாக, இது சட்டவிரோத செயலாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல்வேறு தரப்பினர், தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தில், விதிமுறைகளை மீறி, குளங்களில் இருந்து மணல் அள்ளுவதாக, காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், 4 பேரை கைது செய்தனர்.
மேலும், மணல் அள்ளுவதற்கு அவர்கள் பயன்படுத்திய இயந்திரங்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த தகவலை அறிந்த பட்டுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ அண்ணாதுரை, டி.எஸ்.பி. பாலாஜியை தொடர்பு கொண்டு, கைது செய்த 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொள்ளாத அவர், அந்த 4 பேர் மீதும் தைரியமாக வழக்குப் பதிவு செய்தார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் மிரட்டல் பேச்சுக்கு அடிபணியாமல், குற்றவாளிகளை டி.எஸ்.பி கைது செய்துள்ளது, அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.