கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் தர்ஷன். இவரும், பவித்ரா கௌடா என்ற நடிகையும், மேலும் பல்வேறு தரப்பினரும், ரேணுகா சாமி என்பவரின் கொலை வழக்கில் சிக்கியிருந்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர்கள், சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையே, உடல்நல பிரச்சனையின் காரணமாக, தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் A1 குற்றவாளியாக கருதப்பட்ட பவித்ரா கௌடா, நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நிறைய பேர் தாக்கியதன் விளைவாக தான் ரேணுகா சாமி உயிரிழந்தார். இதில் எந்தவொரு சதியும் இல்லை. இந்த சம்பவத்தில், கடத்துதல், காயப்படுத்துதல் போன்ற எந்தவொரு செயல்களிலும், மனுதாரர் ஈடுபடவில்லை. மேலும், ரேணுகா சாமி மிகவும் ஆபாசமான முறையில் பல்வேறு குறுஞ்செய்திகளை மனுதாரருக்கு அனுப்பினார்.
இதனால், அவருக்கு மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளானார். மேலும், இந்த கொலை வழக்கில் அவர் சம்பந்தப்பட்ட சம்பவம், எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வு. இந்த கொலை வழக்கில், மனுதாரர் நேரடியாக சம்பந்தப்பட்டதற்கு, எந்தவொரு முதன்மை ஆதாரமும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.