Connect with us

Raj News Tamil

தமிழ் சினிமாவை கடுமையாக விமர்சித்த தெலுங்கு மாஸ் ஹீரோ!

சினிமா

தமிழ் சினிமாவை கடுமையாக விமர்சித்த தெலுங்கு மாஸ் ஹீரோ!

சமுத்திரக்கனி இயக்கத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு அன்று வெளியான திரைப்படம் விநோதய வித்தம். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக், ப்ரோ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தையும், சமுத்திரக்கனி தான் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், பவன் கல்யான் ரசிகர்களிடம் உரையாற்றினார்.

அப்போது, பேசிய அவர், தமிழர்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று குறுகிய மனப்பான்மையுடன் நடந்துக் கொள்ளாதீர்கள் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த மாதிரியான எண்ணம் இருந்தால், தமிழ் சினிமா வளராது என்றும் அவர் கூறினார்.

தமிழ் தொழில்நுட்ப கலைஞர்களை மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்த வேண்டும் என்ற புதிய விதியை சமீபத்தில் பெப்சி அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top