விஜய் படத்தில் நடித்தால் தற்கொலை செய்வேன்! பிரபல நடிகருக்கு ஷாக்!

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தெறி. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில், நடிகர் பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த அவரது ரசிகை ஒருவர், தற்கொலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீங்கள் தொடர்ந்து, ரீமேக் படங்களில் நடித்து வருகிறீர்கள்.

ஒரிஜினல் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். எனவே, தெறி ரீமேக்கில் நீங்கள் நடித்தால், நான் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.