‘தெறி‘ ரீமேக்கில் நடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் – பவன் கல்யாணுக்கு கடிதம் எழுதிய முரட்டு ரசிகை

2016ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான படம் தெறி. இப்படத்தில் விஜய், சமந்தா. எமிஜக்சன், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

tamil cinema news

இந்நிலையில் பவன் கல்யாணின் தீவிர ரசிகை ஒருவர் படத்தின் இயக்குனருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “நான் இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை. நீங்கள் தெறி ரீமேக்கில் நடிப்பதாக தகவல் வெளியானதை அடுத்தே நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

பவன் கல்யாண் அண்ணா நீங்கள் இதுபோன்ற ரீமேக் திரைப்படங்களில் நடிக்காமல், ஓர்ஜினல் படங்களில் நடியுங்கள். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் அதிகமான ரீமேக் படங்களில் நடிக்கிறீர்கள். இது எங்களுக்கு வலியைத் தருகிறது.

என்னுடைய சாவிற்கு பிறகாவது தெறி படத்தை ரீமேக் செய்யும் முயற்சியை கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய சாவுக்கு மைத்ரி மூவிஸ் மற்றும் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் தான் காரணம்” என அந்த கடிதத்தில் எழுதப்பட்டது.